சீனாவின் சீ ச்சுவான் மாநிலத்தின் யீ பின் நகரின் ஜுன் லியன் மாவட்டத்தில் பிப்ரவரி 8ஆம் நாள் 11 :50 மணிக்கு, மலைச் சரிவு ஏற்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 10 வீடுகள் சேதமடைந்தன. 30க்கும் மேலானோர் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
இந்த பேரழிவு ஏற்பட்டதையடுத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டார்.
இதில், அனைத்து வழிமுறைகளின் மூலம், காணாமல் போனவர்களைத் தேடி மீட்க வேண்டும். இயன்றளவில் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படாத வகையில் விரைந்து செயல்பட வேண்டும். மீட்பு பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என்றார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்கிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும் தலைமை அமைச்சருமான லீ ச்சியாங் வெளியிட்ட உத்தரவில் காணாமல் போன மக்களை முழு முயற்சியுடன் தேடி மீட்க வேண்டும். மிக பெரியளவில் உயிரிழப்பும் காயமும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். தொடர்புடைய பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றார்.
அவர்களின் உத்தரவுகளின் படி, பல்வேறு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.