தமிழக அரசு மார்ச் மாதத்தில் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து பத்திரப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சனிக்கிழமை என்பது விடுமுறை தினம் என்பதால் இந்த 5 நாட்களிலும் ஆவண பதிவு செய்யப்படுவதற்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் இணைய வழியில் பத்திர பதிவு செய்வதற்கு எந்த இடையூறும் இல்லாத அளவிற்கு அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கத்திலும் அடுத்த மாதம் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதனால் அன்றைய தினம் பொதுமக்கள் வழக்கம் போல் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது