சீனாவின்குய்சோ மாநிலத்தின் சியேஃபுங் வட்டம் மற்றும் குவேன்லிங் வட்டத்தைக் கடந்து
இணைந்திருக்கும் ஹூவாஜியாங்சியாகு எனும் பாலம் செப்டம்பர் 28ஆம் நாள்
அதிகாரப்பூர்வமாக சேவையளிக்கத் துவங்கியது. விட்டம் 1420 மீட்டர் மற்றும் நீர்
மட்டத்திலிருந்து 625மீட்டர் உயரம் கொண்ட இப்பாலம் விட்டத்திலும் உயரத்திலும் உலகின்
முதலிடத்தை வகித்துள்ளது. மேலும் அதன் மொத்த நீளம் 2890 மீட்டராகும்.
முன்பு
2மணிநேரங்கள் பயணம் செல்லும் தூரம் இப்பாலம் மூலம் 2 நிமிடங்களில் நிறைவேற்றப்பட
முடியும்.
மேலும், இப்பாலம் முக்கிய போக்குவரத்துப் பாதையாக மட்டுமல்ல, பாலத்துக்கு அருகிலுள்ள
சுற்றுலா வளங்களை ஒன்றிணைந்து சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான புதிய உந்து
ஆற்றலாகவும் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.