அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக், ஜூலை மாதம் உலகளவில் மைக்ரோசாஃப்ட் கணினிகளை செயலிழக்கச் செய்த தவறான மென்பொருள் புதுப்பிப்புக்கான மூல காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள 12-பக்க பகுப்பாய்வு, அதன் ஃபால்கன் மென்பொருள் புதுப்பிப்பில் கண்டறியப்படாத சென்சார் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
இது தற்போது “புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (பிஎஸ்ஓடி) வெள்ளிக்கிழமை” என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக, இந்த செயலிழப்பு ஜூலை 19 அன்று உலகளவில் 8.5 மில்லியன் விண்டோஸ் சிஸ்டம்களை பாதித்தது.
ரான்சம்வேர், மால்வேர் மற்றும் இணையப் பாதுகாப்பிற்காக வணிகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபால்கன் சென்சார் தயாரிப்பு, புதுப்பிப்பில் சிக்கலை எதிர்கொண்டது.