“என்னுடைய மனநிலை வேறு” மூக்குத்தி அம்மன்-2 இயக்காததற்கு இதுதான் காரணம்…. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்…!! 

Estimated read time 0 min read

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஒருவர் .இவர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.

இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. ஆனாலும் கூட ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கடந்த வருடம் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. சுந்தர் சி தான் இயக்குகிறார் என்று அறிவித்தனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் பூஜை கூட கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்காததற்கான காரணம் என்ன என்பதை ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு ஐடியாவும் கிடையாது. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதையில் வேறு படத்தில் இருந்தது. இப்போது என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author