சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் நிறைவு கூட்டம் மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு பெய்ஜிங்கில் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அரசுப் பணியறிக்கை 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவு திட்டம் முதலியவை இக்கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டன. புதிதாக திருத்தப்பட்ட சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் உள்ளூர் மக்கள் பேரவைகளின் பிரதிநிதிகள் சட்டம் இதில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகம் என்பது இச்சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.