Web team
சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி
ஆண்களை விட பெண்களின் மூளைக்கு
ஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து !
தன்னம்பிக்கையை மனதில் நிறுத்து !
பெண் பலவீனமானவள் அல்ல !
பெண் பலமானவள் உணர்ந்திடு !
வாய்ப்புகள் வழங்கினால் பெண்
வானத்திலும் வலம் வருவாள் !
கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் நிகழ்த்தினார்கள் சாதனை !
இன்னிசையிலும் சாதிப்பாள் பெண் !
எட்டுத்திசையிலும் சாதிப்பாள் பெண் !
அடக்க நினைத்தால் அடங்க மறு !
ஆதிக்கம் செய்தால் ஆதிக்கம் அழி !
போகப் பொருள் அல்ல பெண் ! பொங்கி எழு !
போற்ற வேண்டியவள் பெண் ! உணர்த்திடு !
அடுப்படியில் முடங்கி விடாதே பெண்ணே !
அளப்பரிய திறமைகள் உன் முன்னே !
சாதம் சமைக்கத்தான் பெண் என்பது மடமை !
சாதிக்க முயன்றிடு பெண்ணே உன் கடமை !
தொடர்களுக்கு அடிமையாகி காலம் கழிக்காதே !
தொடர் செயலால் உயர்ந்த சிகரம் தொட்டிடு !
ஆண்களால்முடியாததும் முடியும் பெண்களால்!
ஆணைவிடப் பெண்ணே உயர்வு செயல்களால்!
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை !
முயன்றிடு பெண்ணே முடியும் உன்னால் !
அகிலம் போற்றும் அன்னை தெரசா !
அன்பு செலுத்திய இமயம் தெரசா !
அனைத்துத்துறையிலும் சாதிக்க முடியும் !
அன்பை மதித்தால் எதுவும் முடியும் !
வாழ்வில் போராடியது போதும் !
வாழ்வை வசந்தமாக்கு ! வெளுக்கும் கிழக்கு !
இன்னல் அடைந்தது போதும் !
இனி இன்பம் நிரந்தரமாகட்டும் !
சோதனைக்கு அஞ்சாதே சோகம் வேண்டாம் !
சாதிக்கப்பிறந்தவள் என்ற எண்ணம் வேண்டும் !
சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே !
சரிநிகர் சமமாக வாழ வேண்டும் பெண்ணே !