சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த காலத்திலுள்ள சீனா: சீனாவின் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்வு என்ற பேச்சுவார்த்தை கூட்டம் மார்ச் 10ம் நாள் அமெரிக்காவின் ச்சிக்காக்கோவில் நடைபெற்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் இதில் காணொளி மூலம் உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டின் இரு கூட்டத் தொடர்களில், அமைப்பு சார்ந்த வெளிநாட்டுத் திறப்பு பணியை நிலையாக முன்னெடுத்து, சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தொடர்ந்து அதிகரிப்பதை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
சர்வதேச முதல் தர ஒன்றிணைப்பு தொடர்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் புதிய நன்மைகளை வெளிக்கொணர்ந்து, உலகின் நண்பர்களுடன் சீனப் பாணியுடைய நவீனமயமான வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றார்.