பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார்.
பெர்லினில் நேற்று (பிப்ரவரி 27 ) இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிரிதர் அரமனே, ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் பெனடிக்ட் ஜிம்மருடன் இணைந்து தலைமை தாங்கினார்.
இந்தியா, ஜெர்மனி இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையின் முக்கியத் பங்குவகிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இருதரப்பு பாதுகாப்பு, தற்காப்புப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
அதில் அவர்கள் முந்தய பாதுகாப்பு நிலைமை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தோ- பசிபிக்கில் ஜெர்மனியுடன் சாத்தியமான கூட்டுப் பயிற்சிகள் குறித்து விவாதித்தனர்.
மேலும் சாத்தியமான பாதுகாப்புத் தொழில்துறைத் திட்டங்கள், முன்மொழிவுகள் குறித்தும், நெருங்கிய பாதுகாப்புக் கூட்டாண்மை மற்றும் இரு தரப்பிலும் உள்ள பாதுகாப்புத் தொழில்துறையை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புகளுக்கு கவனம் செலுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டில் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தியாவில் பயணம் செய்ததைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.