கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. தனது அனைத்து சேவைகளிலும் செய்யறிவுத் தொழில்நுட்பத்தை உட்பகுத்தும் கூகுள், கூகுள் மேப்ஸிலும் AI வசதியை இணைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவரை கூகுள் மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேடினால் அந்த இடம் குறித்த தகவல்கள் மற்றும் வழிகள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் தற்போது கொண்டுவரப்படும் புதிய வசதியால் நீங்கள் உரையாடல் மூலம் இடங்கள் குறித்த தகவல்களை பெற முடியும். அதாவது எனக்கு மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கு ஏற்றது போல அருகாமையில் உள்ள இடங்களை காட்டுகிறது. ஒரு கேள்வியுடன் நின்று விடாமல் உரையாடல் போல உங்களுடைய தேடல் குறித்த கூடுதல் விவரங்களை இனி கூகுள் மேப்ஸில் பெற்றுக் கொள்ள முடியும்.