சுங்க வரி போர் சரியான தெரிவு அல்ல

 

“பரஸ்பர சுங்க வரி”பேச்சுவார்த்தையை அமெரிக்கா அண்மையில் தொடங்கியது. அமெரிக்க-ஜப்பான் பொருளாதார வர்த்தக கலந்தாலோசனையில், மாற்று விதிதப் பிரச்சினையில் விட்டுக்கொடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக் கட்டணத்தை ஜப்பான் அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்காவின் சுய நலன்களை மையமாக கொண்ட சூழ்ச்சி என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

 

மேலும், சீனாவுடனான பிற நாடுகளின் வர்த்தகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தினால், சுங்க வரி கொள்கைக்கான விலக்கு உரிமையைப் பெறலாம் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க தரப்பின் வர்த்தக ஆதிக்க நடவடிக்கைக்கு அதன் பாரம்பரிய கூட்டாளிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

 

சீனாவிலிருந்து விலகிச் செல்வது முட்டாள்தனமான செயலாகும். சீனாவுடன் ஒத்துழைப்பது, பிரிட்டன் நாட்டின் நலன்களுக்குப் பொருந்தியது என்று பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்அண்மையில் தெரிவித்தார்.

 

மேலும், அமெரிக்காவின் தவறான வர்த்தக நடவடிக்கைகள், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளால் கட்டுப்படுத்தப்படுவது உறுதி.

 

அபாயத்தின் தாக்குதலை தடுத்து, பொருளாதாரத்தின் நெகிழ்திறனை அதிகரிக்கும் வகையில், வினியோக சங்கிலி மற்றும் தொழில் துறை கட்டமைப்புகளை சரிப்படுத்த பல நாடுகள் முயன்று வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author