நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் 1ம் திருவிழா நேற்று ஆரம்பமானது.
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும் இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது கோவிலின் தனி சிறப்பு ஆகும் இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி பங்குனி திருக்கல்யாண திருவிழா நடந்தது முடிந்த நிலையில் நேற்று சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் 1ம் திருவிழா ஆரம்பமானது.
இதில் காலையில் தெய்வநாயகப் பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளிய பின்னர் கொடிப்பட்டம் வீதிகளில் வலம் வந்ததை தொடர்ந்து காலை சுமார் 9.30 மணியளவில் தெய்வநாயகப் பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன பின்னர். கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடந்தது.
பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஜடாரி, தீர்த்தம், பிரசாத வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி வானமாமலை மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 11 நாட்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் வாகன புறப்பாடு திருவிழா நடைபெறுகிறது. 5ம் திருநாள் கருடசேவையும், 7ம் திருநாள் தங்க பல்லக்கும், கண்ணாடி சப்பரமும், 10 திருநாளன்று பெரிய திருதேர் திருவிழாவும் நடக்கிறது.