தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வு தாள்கள் திருத்தம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மே 9-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நாளை முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. மேலும் இதன் காரணமாக நாளையே ரிசல்ட் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
நாளை வெளியாகிறது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்…? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்..!!!
Estimated read time
1 min read
You May Also Like
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…!
July 20, 2025
NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!
January 2, 2024
