தமிழக அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ₹10,000 கல்வி உதவித்தொகை வழங்கும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, மாணவர்களின் நலன் கருதி தற்போது தமிழக அரசு நாளை (ஜனவரி 6) வரை நீட்டித்துள்ளது. இத்தேர்வின் மூலம் மாநிலம் முழுவதும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை இந்தத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கவும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
