2025ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவும் இந்த விருது நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சியும் செப்டம்பர் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இதில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கல்வி முன்னெடுப்பதற்கான யுனெஸ்கோவின் சிறப்பு தூதருமான பங் லியுன் அம்மையார் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
யுனெஸ்கோ அமைப்பின் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கான கல்வி விருது நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். பெண்களுக்கான அறிவியல் கல்வியில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.
யுனெஸ்கோ அமைப்பு மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பெண்களுக்கான அறிவியல் கல்வியை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்றார்.
