இந்தச் சிலை மென்மையாக செதுக்கப் (smooth Finish) பட்டதல்ல, பார்க்கும்போது திப்பித் திப்பியாகத் தெரியும் வகையில் “Rough Texture”ராக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முறை “இம்பாஸ்டோ” (Impasto) பாணி என்று அறியப்படுகிறது.
சிலையை வடித்த சிற்பி, உளி அல்லது கைகளால் களிமண்ணை அழுத்திய தழும்புகள் அப்படியே வெண்கலத்தில் (Bronze) வார்ப்பிக்கப்படும்.
சிலையின் மேற்பரப்பு சீராக இல்லாததால், அதன் மீது ஒளி விழும்போது பல இடங்களில் நிழல்கள் உருவாகி, சிலைக்கு ஒரு உயிரோட்டத்தையும் ஆழத்தையும் தரும்.
இதுபோன்ற பாணி பெரும்பாலும் ஒரு மனிதனின் வலிமை, கடின உழைப்பு அல்லது தீவிரமான சிந்தனையை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்த பாணியை பிரபலப்படுத்தியவர் சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி வு வெய்சான் (Wu Weishan) ஆவார்.
கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ஜெர்மனியில் உள்ள “ட்ரையர்” நகரத்தில் சிற்பி ‘வு வெய்சான்’ செதுக்கிய தோற்றத்தில் சென்னையில் உள்ள சிலையும் உள்ளது.
இதைச் செதுக்கிய சிற்பி மதிப்புக்குரிய திரு கார்த்திகேயன். ஆனால், அவர் வு வெய்சானை அப்படியே காப்பியடிக்கவில்லை.
டிரையரில் உள்ள சிலையில் மார்க்ஸின் முகமும் Rough Textureராகவே உள்ளது.
ஆனால் சென்னைச் சிலையில் முகம் மட்டும் Smooth Finish பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. இது கம்பீரமும் கனிவும் சேர்ந்த தோற்றத்தைத் தருகிறது.
நன்றி: மூர்த்தி மலையாண்டி பதிவு
