சீன வளர்ச்சியின் வேகம், வியக்க வைக்கிறது என்று பெரு குடியரசுத் தலைவர் தீனா பொலுவார்த்தே அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜுன் மாதம் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர், சி.எம்.ஜி.-க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறுகையில்
சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும்.
இப்பயணத்தில் ஷென்சென், ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய மாநகரங்களுக்கு அடுத்தடுத்து சென்றேன். குறுகிய காலம் பயணித்து இருந்தாலும், அதிகமாக அறிந்து கொண்டேன். சீன வளர்ச்சியின் வேகம், வியக்க வைக்கிறது. ஷென்சென் நகரை எடுத்துக்காட்டாக கூறாலம்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், ஒரு நவீன மற்றும் டிஜிட்டல்மயமான மாநகர் கட்டியமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் நுண்ணறிவுத் துறையில் ஷென்சென்னின் விரைவான வளர்ச்சி நம்பமுடியாத அளவில் உள்ளது. பயணத்தில் நாங்கள் கண்டவையும் கேட்டவையும் சொந்த நாட்டில் நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
சீன-பெரு தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொலுவார்த்தே கூறுகையில்
சீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கினோம். வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்திலும் சான்காய் துறைமுகம் கட்டுமான நிறைவு விழாவிலும் பங்கேற்குமாறு ஷிச்சின்பிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். சீனா, எங்கள் நாட்டின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது.
தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் மேம்பாட்டிற்கான பேச்சுவார்த்தை குறித்த புரிந்துணர்வு குறிப்பாணையில் சீனாவுடனான இரு தரப்பு வர்த்தக அளவை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.