இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்டு பிரிவை சேர்ந்த ‘ஸ்பியர் கார்ப்ஸ்’ மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து நேற்று இரவு தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டம் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர்.