உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்தத் திருவிழாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகள் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி, கடலூர், புதுச்சேரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
