ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசின் அறிவிப்புகள்:
* நான்கு வழிச் சாலைகள், மேம்பாலங்கள் என தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
* வறுமை ஒழிப்பின் இறுதிப் போரில் தமிழகம் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
* திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழைப் பயில்வதற்காக ரூ.10 கோடியில் மையங்கள் அமைக்கப்படும்.
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
* கடந்த வெள்ளிக்கிழமை 1.31 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட போது, நாடே திரும்பி பார்த்தது. இந்தத் திட்டம் நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்குகிறது.
* மகளிர் விடியல் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக மாதத்திற்கு ரூ.888 சேமிக்கின்றனர்.
* பெண்களைத் தொழில் முனைவோராக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
* பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பதிவுத்துறை கட்டணம் 1% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.
* அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* திருநங்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் வகையில், ஊர்க்காவல் படையில் அவர்களை சேர்த்து கௌரவித்துள்ளது தமிழக அரசு.
* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளை 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், பதவி உயர்விலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.42 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
#BudgetTN #TamilNaduBudget #InterimBudget2026 #BudgetTamilNadu #TNBudget2026 #BudgetSessionTN #AssemblyBudgetSession #StateBudget2026 #IndiaStateBudget #PublicFinance
#தமிழ்நாடுபட்ஜெட்2026 #தமிழ்நாடுஇடைக்காலபட்ஜெட்2026 #இடைக்காலபட்ஜெட் #பட்ஜெட்கூட்டம் #தமிழ்நாடுசட்டமன்றம் #தமிழ்நாடுபொருளாதாரம் #மாநிலபட்ஜெட் #பட்ஜெட்விவரம் #பொருளாதாரஅறிக்கை
The post மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.1471 கோடி ஒதுக்கீடு! appeared first on Thaaii Magazine.
