“ரூ.10,62,000,00,00,000/- கடனில் தமிழ்நாடு” தங்கம் தென்னரசு கொடுத்த பகீர் தகவல்….!! 

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை வரும் 2026-27 நிதியாண்டில் ரூ.10.62 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழக அரசு தேவையற்ற இலவசங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்து வருவதாக அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் வருவாயைப் பெருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், கடன் வாங்கித் திட்டங்களைச் செயல்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்குப் பெரிய சுமையாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கவே இத்தகைய கடன்கள் பெறப்படுவதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கடன் தொடர்பான இந்த “பகீர்” தகவல் வெளியாகி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author