சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பிரெஞ்சு தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை 4 பேட்ச்களாக பிரித்து பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் இந்த திட்டம் அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறனை உலகத் தரத்தில் மேம்படுத்த முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி பள்ளிகள் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் இந்த திட்டம் செயல்படும் எனவும், இத்திட்டத்தின்கீழ் அலியான்ஸ் பிரான்சே அமைப்புடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.