இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் சுப்ரமணியம் சனிக்கிழமை (மே 24) அறிவித்தார்.
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சுப்ரமணியம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.
“நான் பேசும் இந்த நேரத்தில், நாம் நான்காவது பெரிய பொருளாதாரம்,” என்று சுப்ரமணியம் கூறினார்.
அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே தற்போது இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா
