கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவித்துள்ளது.
மலைப் பகுதிகளில் கன முதல் அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கான அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. முன்தினம் இரவு முதல் தொடங்கிய கனமழை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த மழை நேற்று முழுவதும் நீடித்து, பல இடங்களில் வெள்ள நிலைமையை உருவாக்கியுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
