வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (அக்டோபர் 16) உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டு முடிவின் அடிப்படையிலேயே அடுத்த முதலமைச்சர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஒரு நேர்காணலில் பேசிய அமித்ஷா, நிதிஷ் குமாரின் அரசியல் பாரம்பரியத்தைப் பாராட்டினார்.
இந்திய சோசலிச அரசியலில் அவர் ஒரு முக்கியப் பிரபலம் என்று குறிப்பிட்ட அமித்ஷா, அவசரநிலையின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக உறுதியாக நின்ற ஜே.பி. இயக்கத்தில் நிதிஷ் குமாரின் முக்கியப் பங்கையும் நினைவுகூர்ந்தார்.
நிதிஷ்குமார் கிடையாதா? பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா
