சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் முதலீட்டு கலந்தாய்வு இயங்குமுறையின் முதலாவது கூட்ட அறிக்கை வெளியீடு

சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென்டாவ், ஜூன் 29ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கான ஆணையர் மரோஷ் ஷெவ்ஜோவிசுடன், பிரசல்ஸில், சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் முதலீட்டு கலந்தாய்வு இயங்குமுறையின் முதலாவது கூட்டத்தை நடத்தி, கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைப் பற்றிய அமைச்சர் நிலை பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, இரு தரப்புறவை நிதானப்படுத்துவதோடு மேலும் சமநிலையாக மாறச் செய்வது சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் முதலீட்டு கலந்தாய்வு இயங்குமுறையின் முக்கிய நோக்கமாகும் என்பதை சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொள்கின்றன.

வர்த்தக மற்றும் முதலீட்டு சமநிலை, ஏற்றுமதிக் கட்டுப்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் ஆகியவை இந்த இயங்குமுறையின் 4 ஆரம்ப பணி துறைகளாகும்.

You May Also Like

More From Author