ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணிமணி நிலவரப்படி, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக கட்சியும், 35 இடங்களில் காங்கிரஸஸும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.
இதில், ஜூலானா தொகுதியில் காலை முதலே முன்னிலை வகுத்து வந்த காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் தற்பொழுது பின்னடவை சந்தித்துள்ளார். 4வது சுற்றின் முடிவில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 19,218 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் 15,577 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் 3641 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடை பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 2,128 வாக்குகள் முன்னிலை வகுத்து வருகிறார்.
இதனிடையே, ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபிந்தர் சிங் ஹூடா, கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மேலும், எல்லனாபாத் தொகுதியில் போட்டியிட்ட INLD தலைவர்களில் ஒருவரும், விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தவருமான அபய் சௌதாலா பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் சிங் பெனிவால் 5778 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.