சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் அம்மையார் ஜனவரி 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அப்போது, இந்திய வெளியுறவுச் செயலரின் சீனப் பயணம் குறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த அக்டோபர் திங்களில் ரஷியாவின் காஷா நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், அமைப்பு முறை பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புகளையும் மீண்டும் தொடங்குவதற்கும், சீன-இந்திய உறவை ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சி பாதை நோக்கி விரைவில் திருப்புவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் என்று மாவோ நிங் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலர் சீனாவில் பயணம் மேற்கொள்வதைச் சீனா வரவேற்கின்றது. இது தொடர்புடைய செய்திகளைச் சீனா உரிய முறையில் வெளிப்படுத்தும் என்றார்.