நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகள் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறையாக கடைபிடிக்கப்படும் நிலையில், மோசமான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களுடன் சேர்ந்து நீலகிரியும் மே மாதம் முதல் தீவிர தென்மேற்கு பருவமழையை எதிர்கொண்டு வருகிறது.
சனிக்கிழமை நீலகிரி முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
