ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது  

Estimated read time 1 min read

ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானி அறை குரல் பதிவுப் பெட்டி மற்றும் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் தரவுப் பதிவுப் பெட்டி ஆகியவை மீட்கப்படுவது, விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட, சுமார் 270 பேர் கொல்லப்பட்ட கொடிய விபத்திற்கான சாத்தியமான காரணத்தைக் கண்டறிய உதவும்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ராவிடம், கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த அவர், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் சிவில் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார்.

You May Also Like

More From Author