ஜுன் 17ம் நாள் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் ஒத்துழைப்பு குறித்து தொடர்ச்சியாக ஒத்த கருத்துகள் எட்டப்பட்டுள்ளன.
சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பின் அனுபவத்தை, மதிப்பு, நம்பிக்கை, நலன், உதவி ஆகியவற்றை ஒன்றுக்கொன்று பரிமாறி, உயர் தர வளர்ச்சியுடன் கூடிய கூட்டு நவீனமயமாக்கத்தை “சீன-மத்திய ஆசிய எழுச்சி” முன்னெடுக்கும் என்று ஷிச்சின்பிங் கூறினார். இந்த எழுச்சி, ஆழ்ந்த வரலாற்று பதிவை வெளிக்காட்டுவதோடு, காலத்தின் வளர்ச்சி போக்கிற்குப் பொருந்தியது.
இரு தரப்பின் ஒத்துழைப்பு, முக்கிய திட்டப்பணிகளை மட்டுமல்ல, புத்தாக்கத் துறையிலும் 6 நாடுகளின் கூட்டு நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிற்கு சீன-மத்திய ஆசிய எழுச்சி தேவைப்படும். சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையைக் கூட்டாகப் பேணிக்காத்து, மேலாதிக்கத்தையும் வல்லரசு அரசியலையும் எதிர்த்து, சமமான ஒழுங்கான உலகின் பலதுருவமயமாக்கம் மற்றும் பொறுப்பு தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தை ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்று சீனா நடப்பு உச்சிமாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளது.