சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜனவரி 28ம் நாள் ஜிம்பாப்வே தேசிய விடுதலை போரின் வீரர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.
இக்கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் ஆப்பிரிக்காவும், புதிய யுகத்தில் அனைத்து காலங்களிலும் சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்கி, இருதரப்பு நட்பின் புதிய அத்தியாயத்தைத் தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அண்மையில் ஜிம்பாப்வே தேசிய விடுதலை போரின் மூத்த வீரர்கள் கூட்டாக ஷிச்சின்பிங்கிற்குக் கடிதம் அனுப்பி, ஜிம்பாப்வே தேசிய விடுதலைக்கு சீனா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்களும் புதிய யுகத்தில் படைத்துள்ள சாதனைகளுக்கு அவர்கள் நன்மதிப்பு தெரிவித்தனர்.
