சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு சில உள்நாட்டு அறிவியல் ஆய்வு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து ஆராய்ந்த “சூச்சோங்ச்சி-3.0”எனும் மீக்கடத்தி குவாண்டம் கணினி 3ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மீக்கடத்தி அமைப்பிலான குவாண்டம் கணித்தல் துறையில் இது உலக சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மீக்கணினியின் பல முக்கிய திறன்கள் முந்தைய மாதிரிகளை விட பெரிதும் மேம்பட்டு உலக முன்னணியில் உள்ளது. குறிப்பாக அதன் செயலாக்க வேகம், கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டின் அக்டோபர் திங்களில் வெளியிட்ட மீக்கடத்தி குவாண்டம் கணினி மாதிரியை விட 10 இலட்சம் மடங்குகள் அதிகமானது.
குவாண்டம் கணித்தல் துறையில் தற்போது சீனாவும் அமெரிக்காவும் உலக முன்னணியில் உள்ளன.