நடுவானில் பறந்த விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீர் புகை மற்றும் தீ… அலறிய பயணிகள்..

Estimated read time 1 min read

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இருந்து அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் புகை வர தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் என்ஜினில் இருந்து தீ வர தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விமானம் மீண்டும் லாஸ்வேகாஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்க பட்டதால் அதிலிருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author