மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கும் புதிய வரி விதிப்புக்கு மெக்சிகன் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா, இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் கிடைத்தன.
இது 2026 முதல் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்ற பல்வேறு பொருட்களுக்கு புதிய வரிகளை உயர்த்தும் அல்லது அறிமுகப்படுத்தும்.
டிரம்பினை குளிர்விக்க இந்தியா மீது 50% வரிகளை விதித்த மெக்ஸிகோ?
