ஜூன் 30-ம் தேதி முதல்… மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்…

Estimated read time 1 min read

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி சென்னையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இந்த 5 பேருந்து பணிமனைகளில் மின்சார பேருந்துகளுக்கு தேவையான சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சுலபமாக ஏறி இறங்கும் வகையில் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன் பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அமைச்சர் முதலமைச்சர் ஜூன் 30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். அதன்படி சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author