மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.! அமித்ஷா இரங்கல்…

Estimated read time 1 min read

ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புஷ்பக் ரயிலில் தீப்பற்றியதாக பரவிய வதந்தியை நம்பி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, `அபாய அலாரம்’ அடித்ததால், மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள பச்சோராவிற்கு அருகில் உள்ள மஹேஜி மற்றும் பர்தாட் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர், வேகமாக ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் வெளியேறிய போது எதிர்திசையில் எதிரே வந்த ரயில் மோதியதில் இந்த சோக விபத்து நடந்துள்ளது. தற்போது, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த ரயில் விபத்துக்குமகாராஷ்டிரமாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ,”மகாராஷ்டிரா, ஜல்கானில் ரயில் மோதி 8 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author