2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதாரக் கருத்தரங்கு சீனாவின் தியன்ஜின் மாநகரில் துவங்கியது.
நடப்பு கருத்தரங்கின் தலைப்பு, புதிய பிணைப்பாக எண்ணியல் பொருளாதாரம், ஒத்துழைப்புக்கான புதிய வெளியை கூட்டாக விரிவாக்குவது என்பதாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நாடுகளுக்கிடையே பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், நெருக்கமான ஒத்துழைப்பு கூட்டாளியுறவை உருவாக்குதல், எண்ணியல் பொருளாதாரத்தின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான புதிய வெளியைக் கூட்டாகத் திறப்பது உள்ளிட்டவற்றை இது கூட்டாகத் திறப்பது என்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளைச் சேர்ந்த அரசாங்கம், தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிந்தனைக் குழுக்கள் முதலியவற்றைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கருத்தரங்கில் எண்ணியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு துறைகளில் சமீபத்திய புதிய பயன்பாடுகள், தொழில் நுட்ப புத்தாக்கங்கள் மற்றம் தொழிற்துறை வளர்ச்சி போக்கு நிலைமை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டன.