2025ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சி என்ற இலக்கு அடைவதில், சீனத் துணை தலைமை அமைச்சர் டிங் சுய்சியாங் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
போஆவோ ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக் கூட்டம் மார்ச் 27ம் நாள் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் துவங்கியது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய அவர், ஆக்கப்பூர்வமான பொருளாதார கொள்கைகள், புத்தாக்கம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, திறப்பு பணியை மேலும் ஆழமாக்குவது ஆகியவற்றுக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்.
4 நாட்கள் நீடித்த இந்த கூட்டத்தில், 50க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் 60-க்கும் மேலான நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 2000 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
டிங் சுய்சியாங் மேலும் கூறுகையில்,
புதிய மற்றும் எதிர்கால தொழில்களை வளர்ப்பதிலும், பாரம்பரிய துறைகளைப் புதுப்பிப்பதிலும் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய ஆற்றல் வாகனத் துறை மற்றும் ஏஐ. உயிரி உற்பத்தி, குவாண்டம் தொழில்நுட்பம், தாழ் உயரப் பொருளாதாரம் உள்ளிட்ட பிற துறைகள் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி, சீனாவுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் முழு உலகத்திற்கும் வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று சுட்டிக்காட்டினார்.
