சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரின் அறிவிப்பின் படி, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டம் 15ஆம் நாள் சீனாவின் டியன் ச்சின் நகரில் நடைபெறவுள்ளது.
சீன கம்யூன்ஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இவ்வமைப்பின் நிரந்தர நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வமைப்பின் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்பு முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.