தென் சீன கடல் பற்றிய “நடுவர் தீர்ப்பு முடிவு”வெளியிடப்பட்ட 9வது ஆண்டு தொடர்பான அறிக்கையை ஃபிலிப்பைன்ஸ் வெளியிட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
தென் சீன கடல் பற்றிய“நடுவர் தீர்ப்பு”பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது. “நடுவர் தீர்ப்பு முடிவு”என்பது, சட்டவிரோதமான பயனில்லாத கழிவு காகிதம். சீனா, அதை ஏற்றுக்கொள்ளாது.
இம்முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எந்த செயலையும் சீனா ஏற்றுக்கொள்ளாது. தென் சீன கடல் பரப்பில் சீனாவின் அரசுரிமையும் கடல் நலன்களும் எந்த நிலைமையிலும் இந்த“நடுவர் தீர்ப்பு முடிவினால்”பாதிக்கப்படாது என்று தெரிவித்தார்.