சீனத் தொழில் நிறுவனத்தால் கட்டியமைக்கப்பட்ட டாஷர்காந்தி கழிவு நீரைக் கையாளும் ஆலையின் கட்டிட நிறைவு விழா 13ஆம் நாள் வங்காளத் தேசத் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது. அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஹசினா அதில் கலந்து கொண்டார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது, வங்காளத் தேச உயிரினச் சூழலை மேம்படுத்துவது, உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது முதலியவற்றுக்குப் பங்காற்றி வரும் சீனாவுக்கு, இவ்விழாவில் கலந்து கொண்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
டாஷர்காந்தி கழிவு நீரைக் கையாளும் ஆலை, ஓராண்டுக்கு மேலாக இயங்கியுள்ளது. இக்காலக்கட்டத்தில், டாக்கா நகரின் கழிவு நீர் பிரச்சினை குறிப்பிட்டளவில் சமாளிக்கப்பட்டுள்ளது. டாஷர்காந்தி கிராமத்தின் உயிரினச் சூழல் தெளிவாக மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.