அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் பால்டிமோர் துறைமுகம் அருகே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்திற்கு அருகில் சரக்குக் கப்பலில் திடீரென தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு படையினரும் அமெரிக்க கடலோர காவல்படையும் விரைந்தனர். அதிகாரிகள் தெரிவித்ததாவது – கப்பலில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டது தவிர, யாருக்கும் காயமோ, வேறு சொத்து சேதமோ ஏற்படவில்லை.
மாலை 6.28 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து, வெடிப்பு போல் காட்சியளித்தது. கப்பலின் முன்பகுதியிலிருந்து பெரிய தீப்பந்து எழும்பும் காட்சி அங்கு இருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர்வாசிகள், “சத்தம் வீடு குலுங்கும் அளவுக்கு இருந்தது” என கூறியுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
WATCH: Explosion aboard cargo ship near the Baltimore Harbor pic.twitter.com/IG60GREcPy
— BNO News Live (@BNODesk) August 18, 2025
“>
இந்த கப்பல் மொரிஷியஸுக்கு செல்லும் MV W சபையர் எனும் சரக்குக் கப்பலாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அது ஃபோர்ட் ஹோவர்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, தீயணைப்பு குழுவினரும் கடலோர காவல்படையும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இதே பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலமே கடந்த மார்ச் மாதம் கொள்கலன் கப்பல் மோதியதில் இடிந்து விழுந்து, 6 தொழிலாளர்கள் பலியானதால் பால்டிமோர் துறைமுகம் பல மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.