திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விதித்துள்ள குண்டா வரி, மேற்கு வங்கத்தில் முதலீட்டைத் தடுப்பதாக தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மாற்றம் ஏற்பட ஆட்சி மாற்றம் வேண்டுமென கூறிய பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என தெரிவித்தார்.
முன்னதாக பீகார் சென்ற பிரதமர் மோடி, கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 4 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுமனைகளை ஒப்படைத்தார்.