முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உத்தரப் பிரதேச டிஜிட்டல் மீடியா கொள்கை 2024, நாட்டிற்கு எதிரான உள்ளடக்கத்தை இடுகையிடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.
இந்த தண்டனைகள் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை இருக்கலாம்.
“ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை” பதிவேற்றும் ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளும் இந்தக் கொள்கையில் அடங்கும்.