சீனாவில் சரக்கு தொடர்வண்டி மூலம் அனுப்பப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பாதியில் 198கோடி டன்னை எட்டியுள்ளதாகச் சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாளுக்கு சுமார் 1லட்சத்து 82ஆயிரத்து 400 லாரிகளின் சரக்குகள் ஏற்றப்படலாம். கடந்த ஆண்டை விட, இவ்விரு எண்ணிக்கைகள் முறையே 3.0விழுக்காடு மற்றும் 4.0விழுக்காடு அதிகரித்துள்ளன.
மேலும், எல்லை கடந்த சரக்குப் போக்குவரத்துத் துறையில், இவ்வாண்டின் முற்பாதியில் சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவைகள் நிலையாக அதிகரித்தன. குறிப்பாக 7349 சீன-மத்திய ஆசிய சரக்குத் தொடர்வண்டிகள் சேவையளித்துள்ளன. சீன-லாவோஸ் தொடர்வண்டிகள் மூலம் 30லட்சத்து 29ஆயிரம் டன் சரக்குகளை அனுப்பப்பட்டு கடந்த ஆண்டை விட, 9விழுக்காடு அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார தொடர்பு பெரிதும் முன்னேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.