கிர்கிஸ்தான் நாடாளுமன்றத் தலைவர், ஹங்கேரி நாடாளுமன்றத் தலைவர், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் தேசிய அவை மற்றும் மாநில அவைத் தலைவர்கள், பன்னாட்டு நாடாளுமன்றச் சங்கத தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரின் அழைப்பையேற்று, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சௌலெச்சி ஜூலை 23முதல் 31ஆம் நாள் வரை, கிர்கிஸ்தான், ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ நட்புப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள 6ஆவது உலக நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.