நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்புக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.
இதில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ₹50,000லிருந்து ₹75,000 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பிடித்தம் ₹15,000ல் இருந்து ₹25,000 ஆக உயரும்.
வருமான வரி விவரம்:
ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு- வரி இல்லை
ரூ.3 -7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 5% வரி
ரூ.7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 10% வரி
ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 15% வரி
ரூ.12 முதல் -15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 20%
ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு – 30% வரி