ஷாங்காயில் நடைபெற்ற 6-ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருள்காட்சி, சீன நிறுவனங்களுடன் இணைந்து பயனுள்ள பரிமாற்றத்தை அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டன. இந்தப் பொருள்காட்சியில் சீன நுகர்வோருக்கு உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி, ஒயின், இறைச்சி மற்றும் வாதுமைக்கொட்டை உள்ளிட்ட பொருட்களை 17 அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இந்த பொருட்காட்சியில் கண்காட்சியாளர்கள் சீன நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று, ஒருமித்த கருத்தை எட்டினர். இப்பொருட்காட்சி இரு தரப்பினருக்கும் வணிக வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இந்த தளத்தின் மூலம் மேலதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இப்பொருட்காட்சியில் நாங்கள் சில சாதனைகளைப் பெற்றுள்ளோம். நாங்கள் ஏழு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் ஏழாவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கு பதிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இங்கு வரவுள்ளோம் என்று அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி சபையின் தலைவர் ஸ்டான் பார்ன் தெரிவித்தார்.
இவ்வாண்டின் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி, 154 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை ஈர்த்துள்ளது. 3400 கண்காட்சியாளர்கள் மற்றும் 394 ஆயிரம் தொழில்முறை பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர்.