உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவைச் செயல்படுத்துவதில் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கையை சீனா ஜுன் 20ஆம் நாள் வெளியிட்டது.
கடந்த இரு ஆண்டுகளில் சீனா பல்வேறு ஒத்துழைப்பு கூட்டாளிகளுடன் இணைந்து இம்முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை ஊக்குவித்து, 2030 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் இவ்வறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளின் முயற்சிகளுடன், வளர்ச்சியைக் கூட்டாக ஊக்குவிக்கும் சர்வதேச ஒத்த கருத்து இம்முன்மொழிவின் மூலம் திரட்டப்பட்டு, உலகளாவிய சவால்களுக்கும் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான தேவைகளுக்கும் மறுமொழி அளிக்கப்பட்டு, 2030 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் இவ்வறிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனாவிலுள்ள பல வெளிநாட்டுத் தூதாண்மை அதிகாரிகளும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இவ்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இம்முன்மொழிவின் பங்கினையை அவர்கள் வெகுவாகப் பாராட்டியதோடு, அதன் முன்னேற்றம் பற்றி மனநிறைவு தெரிவித்தனர் என்று கூறினார்.
மேலும், வளரும் நாடுகள், குறிப்பாக உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நாடுகளின் மக்களுக்கு நன்மைகளை இம்முன்மொழிவு அதிகரித்துள்ளதாகவும், சீனாவுடன் இணைந்து இம்முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர் என்றும் மாவ் நிங் தெரிவித்தார்.